Saturday 20 December 2008

காதல் என் வசம்

காதலைப் பற்றி என் மனதில் உள்ளவை. காதல் என்பது ஒரு பெண்ணுக்கு ஆணுடனோ அல்லது ஆணுக்கு பெண்ணுடன் தான் வர வேண்டும் என்பது தவறு. இதைப்பற்றி விரிவாக பேசுவதற்கு முன் என்னளவில் காதல் என்பது என்ன?

காதல் என்பது பொதுவான பல அர்த்தங்கள் பொதிந்த வார்த்தை. அது பயன்படுத்தப்படும் இடத்தைப் பொறுத்துத் தன் தன்மைகளைக் கொள்ளும். என்னளவில் காதல் என்பது ஒருவர் மீது ஒருவர் கொள்ளும் அன்பைக் குறிக்கும் சொல்லே. தற்கால நடைமுறையில் காதல் என்பது ஆண்,பெண் அன்பைக் குறிக்கும் சொல்லாகவே பயன்படுத்தப் படுகிறது. ஒரு தாய்க்கும் குழந்தைக்கும், சகோதர சகோதரிகளுக்கு இடையிலும், ஆசிரியர் மாணவர்க்கு இடையிலும் உள்ள அன்பை யாரும் காதல் என்று சொல்வதில்லை.

ஆண், பெண் இடையேயான அன்பானது பாசம், கருணை, ஈர்ப்பு, உரிமை, ஆளுமை, மரியாதை என பல கூறுகளைக் கொண்டது. உண்மையான அன்பு ஒருவருடைய மனதையும் எண்ண ஓட்டங்களையும் மாற்றும் சக்தியுடையது. அது ஒருவரைத் தன் சமூகத்தைப் பல புதிய பரிமாணங்களில் பார்க்கவும் புரிந்து கொள்ளவும் தூண்டுகிறது. என்னைப் பொறுத்தவரை ஒருவன் ஒரு பெண்ணை நேசிக்கும் முன் தன் மண்ணை, நாட்டை நேசிக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் அந்தக் காதல் உண்மையாகவும் வலிமையாகவும் இருக்கும் என்று நான் நம்பவில்லை.

இது என் முதல் பதிவாகையால் காதல் என்ற அழகான, ஆழமான, வலிமையான விஷயத்தைப் பற்றி பேசினேன். இனி......