Monday 14 February 2011

தம்பி

எத்தனையோ முறை நான் செவிமடுத்த இந்த வார்த்தை சமீபகாலமாக எனக்கு ஒரு புதிய கோணத்தில் தென்படுகிறது. அரசியல் தலைவர்கள் முதல் அருகாமையில் வசிப்போர் வரை அனைவரிடமும் கேட்ட வார்த்தைதான். ஆனால் அன்று எங்கள் உரையாடலில் இந்த வார்த்தை ஒரு புதிய பரிணாமத்தைப் பெற்றது என் மனதில். என் நண்பன் ஒவ்வொரு முறை அந்த சொல்லை உச்சரிக்கும் போதும் என் மனதில் ஓர் இனம் புரியாத உணர்வு. யார் அந்த தம்பி? வீரன் வேலுத்தம்பியா? தற்காலத் தம்பியா? யாராயினும் "தம்பி உடையான் படைக்கு அஞ்சான்". ஆனால் இங்கு தமிழே, தமிழினமே அல்லவா அண்ணனாக இருக்கிறது ??????????

அனுபவம் தந்த முதிர்ச்சி

  கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நான் இன்னும் உயிரோடுதான் இருக்கிறேன் என்பதற்கு சாட்சி மேலே உள்ள வார்த்தைகள். நல்லவை, கெட்டவை என வேறுபடுத்திப் பார்க்க இயலாத வகையில் எத்தனையோ நிகழ்வுகள். இன்று நல்லவை என்பது நாளை கெட்டவையாக மாறலாம். இதுவே மாறியும் நடக்கலாம். காலம் என்கிற சூழ்நிலையில் அகப்பட்டுக்கொண்ட அற்ப மனிதர்கள் நாம். ஒரு நிகழ்வின் முடிவு நல்லதா, கெட்டதா என்பதை விட, அதை ஆராய்ந்து சூழ்நிலைக்கு ஏற்ப அதை நுகருதலே அனுபவத்தின் சிறப்பு.    வானம் போல இருக்க வேண்டும் என்ற எனது ஆசிரியர் கூற்றைப் போல அனைத்தையும் உள்வாங்கும் வானமாக மாறும் முயற்சியில்....